Skip to main content

Posts

கப நோய்களை விரட்டியடிக்க உதவும் ஆடாதொடை

  ஆடா தொடை எங்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு பச்சிலையாகும். இது செடியினத்தை சேர்ந்தது. தன்னிச்சையாக வளரும். மாவிலைகள் போன்று இதன் இலைகள் இருக்கும். இதன் பூக்கள் வெண்மையானது. ஆடாதொடையின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயனுடையது. காசநோயினாலும், கபத்தினாலும் அவதிப்படுவோருக்கு ஆடா தொடை இலை பெரிதும் உதவுகிறது. இதன் இலையை சுத்தம் செய்த, பொடியாக நறுக்கி, கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தேன் சேர்த்து குடித்து வந்தால் கசரோகம் படிப்படியாக குறையும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது ஒரு அருமருந்து.  நுரையீரலில் தேங்கி நிற்கும் கபத்தை சிறிது சிறிதாக வெளியேற்றும். மூச்சுத் திணறல், இரத்த வாந்தி, இருமல் போன்ற நோய்களால் அவதியுறுவோருக்கு, ஆடாதொடை இலையை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து தேனில் கலந்து கொடுத்துவந்தால் மூச்சுத்திணறல் உடனே நிற்கும், இருமல் குணமாகும் சீத பேதியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடா தொடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க குணமாகும்.  ஆஸ்துமா என்னும் சுவாசகாச நோயுள்ளவர்கள் அதிக குளிர் ஏற்பட்டாலும், மழை, பள்...

ஆஸ்துமா என்னும் கொடிய நோயை விரட்டியடிக்கலாமா!!

  ஆஸ்துமா(Asthma) என்பது ஒரு கொடிய நோயா? அதைக் குணப்படுத்த முடியாதா? என்னும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.மனிதனுக்கு முதல் முக்கிய உணவே காற்றுதான். அதை பெறுவதில் தடைகளை ஏற்படுத்தும் இந்த ஆஸ்துமா நோய். ஆம் ஆஸ்துமா நோயாளிகளால் இயல்பாக சுவாசிக்க முடியாது.   பொதுவாக சுவாசக் குழாயில் ஏற்படும் அடைப்பு, அல்லது வீக்கம் இதுவே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் இயல்பாக சுவாசிக்க முடியாது. ஓட முடியாது. தூசி உள்ள இடங்களிலும் இருக்க முடியாது. குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட முடியாது.   இதற்கு தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. இன்றளவும் பலர் இந்த பிரச்சனைக்கு இன்ஹேலரையே பயன்படுத்துகின்றனர். இது சரியான தேர்வா என்றால் சற்று  சிந்திக்க வேண்டிய விஷயமாகத்தான் உள்ளது .ஏனென்றால் இது தற்காலிக தீர்வை மட்டும்தான் கொடுக்குமே தவிர, நிரந்தர தீர்வை கொடுக்காது  என்கின்றனர் பலர் . இதை ஒருமுறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டியதாயிருக்கும்.   அப்படியென்றால் இதற்கு தீர்வுதான் என்ன என்...

அரைக்கீரையும் அதன் அற்புத நன்மைகளும்!!

  பித்தசுரம் போக்கும் குளிர்க்காய்ச்சலை குணமாக்கும் உடல் வலிகளை நீக்கும் ஜலதோஷம், சன்னி, வாதம், சளி, இருமல் ஆகியவற்றை போக்கவல்லது உடலுக்கு வலுவூட்டும் சூதக சன்னி கோளாறுகள் நீக்கும் ஜீவசக்தியை பெருக்கும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மண்டை பீநிசத்தை நீக்கும்     இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடி வகையாகும்.இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும், அடிப்பக்கம் சிவப்பும், நீலமும் கலந்த தங்க நிறமாகவும் காட்சியளிக்கும்.கிளைவிட்டு வளரக்கூடியது.இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியது. நாள்தோறும் உண்ணுவதற்கு ஏற்றது. எந்தவித நோயாளிக்கு கெடுதல் விளைவிக்காத முதல் சத்துணவாக விளங்கக்கூடியது.இக்கீரையில் இரும்பு சத்து உள்ளது.    இக்கீரையை உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து உண்ண காய்ச்சல், நடுக்கம், சன்னி, காயாரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் துவரம்பருப்பை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளி போட்டு தாளித்து அவியலாக செய்து சாப்பிட சளி இருமல், கப இருமல் யாவும் நீங்கும். அத்துடன் வெங்காயமும், பெருங்காயமும் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட ஜலதோசம், சன்னி, பாதசுரம், குளி...

63 வகை சத்துக்கள் கொண்ட அகத்திக்கீரை!!

                          அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.             அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.                நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறத...

அறுசுவை உணவின் நன்மைகள்

  இனிப்பு : உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு : ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு :   ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.   கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் : உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. கசப்பு : உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும். ச...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தர்ப்பை புல்!!

  களைத் தாவரமாக கருதப்படும் தர்ப்பை புல்லில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது   இன்றும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை  .   இந்த தர்ப்பை புல் குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் பழங்காலங்களில் கூரைகள் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இது லேசான துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடனும் இருப்பதால் சீனா போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் ஜெல்லி , வினிகர் , சாஸ் , தேநீர் , ஒயின் , பற்பசை போன்ற அன்றாடம் பயன்டுத்தப்படும் பொருட்களில் இதை சேர்த்து பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தர்ப்பை தாவரத்தில் சபோனின்கள் , கிளைக்கோசைடுகள் , கெளமாரின்கள் , ஃபிளேவனாய்டுகள் , மற்றும் பீனால்கள் போன்ற 72 விதமான வேதிப்பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளதாம். தாவரவியல் பெயர்  : Imperata Cylindrica ஆங்கிலப் பெயர் : Blady Grass மருத்துவ குணங்கள் :           நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது .           புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது .     ...

சிறுநீர் சிகப்பு நிறத்தில் வந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்!!

  சிறுநீரில் இரத்தம் வருவது நல்லதல்ல, அவ்வாறு வந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அதிகமாக வலிநிவாரணி மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, கடுமையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதனால் அடிபடுவது, சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுவது, கல்லடைப்பு போன்ற பல காரணங்களால் இரத்தம் வரலாம். ஒவ்வொரு காரணத்திற்கும் அறிகுறிகள் உண்டு. 1. சிறுநீர் கழிக்கும் போது மட்டும் இரத்தம் கசிவது : சிறுநீர் புறவழி அழற்சி அடைந்திருப்பதை குறிக்கும். 2. சிறுநீர் கழிக்கும் போது கடைசி சில துளிகள் மட்டும் இரத்தமாக இருப்பின் : சிறுநீர்ப்பை வயிற்றுப்புறம் புண்ணாகியிருப்பதைக் குறிக்கும். 3. தாங்கமுடியாத இடுப்புவலியுடன் சிறுநீர் கழிப்பதாயின் :  சிறுநீரகத்தில் கல்லடைப்பு காரணமாகும்  4. சிறுநீரகத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை இரத்தம் உறைந்து சிறுசிறு கட்டிகள் போன்று வெளியேறுதல் : சிறுநீரகம் (அ) சிறுநீர்ப் பையில் கட்டிகள் இருப்பதை உணர்த்தும். 5. ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம்,  கடுமையான உடற்பயிற்சிப் போட்டிகளில் ஈடுபடும் போது ஏற்படும் அதிர்வு, சிறுநீரக சிராய்ப்பினால்  சிறுநீரில் இரத்தம் கசிய ...