பித்தசுரம் போக்கும் குளிர்க்காய்ச்சலை குணமாக்கும் உடல் வலிகளை நீக்கும் ஜலதோஷம், சன்னி, வாதம், சளி, இருமல் ஆகியவற்றை போக்கவல்லது உடலுக்கு வலுவூட்டும் சூதக சன்னி கோளாறுகள் நீக்கும் ஜீவசக்தியை பெருக்கும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மண்டை பீநிசத்தை நீக்கும் இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடி வகையாகும்.இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும், அடிப்பக்கம் சிவப்பும், நீலமும் கலந்த தங்க நிறமாகவும் காட்சியளிக்கும்.கிளைவிட்டு வளரக்கூடியது.இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியது. நாள்தோறும் உண்ணுவதற்கு ஏற்றது. எந்தவித நோயாளிக்கு கெடுதல் விளைவிக்காத முதல் சத்துணவாக விளங்கக்கூடியது.இக்கீரையில் இரும்பு சத்து உள்ளது. இக்கீரையை உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து உண்ண காய்ச்சல், நடுக்கம், சன்னி, காயாரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் துவரம்பருப்பை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளி போட்டு தாளித்து அவியலாக செய்து சாப்பிட சளி இருமல், கப இருமல் யாவும் நீங்கும். அத்துடன் வெங்காயமும், பெருங்காயமும் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட ஜலதோசம், சன்னி, பாதசுரம், குளி...