Skip to main content

சிறுநீர் சிகப்பு நிறத்தில் வந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்!!

 


சிறுநீரில் இரத்தம் வருவது நல்லதல்ல, அவ்வாறு வந்தால் அதை அலட்சியப்படுத்த

வேண்டாம். அதிகமாக வலிநிவாரணி மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது,

கடுமையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதனால் அடிபடுவது,

சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுவது, கல்லடைப்பு போன்ற பல

காரணங்களால் இரத்தம் வரலாம். ஒவ்வொரு காரணத்திற்கும் அறிகுறிகள் உண்டு.


1. சிறுநீர் கழிக்கும் போது மட்டும் இரத்தம் கசிவது : சிறுநீர் புறவழி அழற்சி அடைந்திருப்பதை குறிக்கும்.


2. சிறுநீர் கழிக்கும் போது கடைசி சில துளிகள் மட்டும் இரத்தமாக இருப்பின் : சிறுநீர்ப்பை வயிற்றுப்புறம் புண்ணாகியிருப்பதைக் குறிக்கும்.


3. தாங்கமுடியாத இடுப்புவலியுடன் சிறுநீர் கழிப்பதாயின் :  சிறுநீரகத்தில் கல்லடைப்பு காரணமாகும் 


4. சிறுநீரகத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை இரத்தம் உறைந்து சிறுசிறு கட்டிகள் போன்று வெளியேறுதல் : சிறுநீரகம் (அ) சிறுநீர்ப் பையில் கட்டிகள் இருப்பதை உணர்த்தும்.


5. ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம்,  கடுமையான உடற்பயிற்சிப் போட்டிகளில் ஈடுபடும் போது ஏற்படும் அதிர்வு, சிறுநீரக சிராய்ப்பினால்  சிறுநீரில் இரத்தம் கசிய வாய்ப்புண்டு.


6. சிலவகை வலி நிவாரணி மருந்துகளை சாப்பிடுவதாலும், போதிய அளவு தண்ணீர் இல்லாமல்  பற்றாக்குறை ஏற்படும் போதும், இரவு நேரக் கண்விழிப்பு, அதிக அளவு மது அருந்துதல், ஓயாத புகைப்பழக்கம் காரணமாகவும் சிறுநீரில் இரத்தம் கசிவதுண்டு. 



எனவே சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வருவதாக உணர்ந்தால் பதட்டமடையாமல் , சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை  பெற்று அதற்கான சரியான காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.


சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு டயாவின் சித்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.    


சிகிச்சை பற்றிய தகவல்களைப் பெற 9489832921 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....