மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள் மூலம்(Piles) : மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம் உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் : உடலில் ஏற்படும் அதிகளவு வெப...