Skip to main content

Posts

Showing posts from September, 2023

சிறுநீர் சிகப்பு நிறத்தில் வந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம்!!

  சிறுநீரில் இரத்தம் வருவது நல்லதல்ல, அவ்வாறு வந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அதிகமாக வலிநிவாரணி மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, கடுமையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அதனால் அடிபடுவது, சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல் ஏற்படுவது, கல்லடைப்பு போன்ற பல காரணங்களால் இரத்தம் வரலாம். ஒவ்வொரு காரணத்திற்கும் அறிகுறிகள் உண்டு. 1. சிறுநீர் கழிக்கும் போது மட்டும் இரத்தம் கசிவது : சிறுநீர் புறவழி அழற்சி அடைந்திருப்பதை குறிக்கும். 2. சிறுநீர் கழிக்கும் போது கடைசி சில துளிகள் மட்டும் இரத்தமாக இருப்பின் : சிறுநீர்ப்பை வயிற்றுப்புறம் புண்ணாகியிருப்பதைக் குறிக்கும். 3. தாங்கமுடியாத இடுப்புவலியுடன் சிறுநீர் கழிப்பதாயின் :  சிறுநீரகத்தில் கல்லடைப்பு காரணமாகும்  4. சிறுநீரகத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை இரத்தம் உறைந்து சிறுசிறு கட்டிகள் போன்று வெளியேறுதல் : சிறுநீரகம் (அ) சிறுநீர்ப் பையில் கட்டிகள் இருப்பதை உணர்த்தும். 5. ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம்,  கடுமையான உடற்பயிற்சிப் போட்டிகளில் ஈடுபடும் போது ஏற்படும் அதிர்வு, சிறுநீரக சிராய்ப்பினால்  சிறுநீரில் இரத்தம் கசிய ...