Skip to main content

அரைக்கீரையும் அதன் அற்புத நன்மைகளும்!!

 


பித்தசுரம் போக்கும்

குளிர்க்காய்ச்சலை குணமாக்கும்

உடல் வலிகளை நீக்கும்

ஜலதோஷம், சன்னி, வாதம், சளி, இருமல் ஆகியவற்றை போக்கவல்லது

உடலுக்கு வலுவூட்டும்

சூதக சன்னி கோளாறுகள் நீக்கும்

ஜீவசக்தியை பெருக்கும்

நரம்பு தளர்ச்சியை போக்கும்

மண்டை பீநிசத்தை நீக்கும்

    இக்கீரை சாதாரணமாக பயிரிடக்கூடிய ஒரு செடி வகையாகும்.இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும், அடிப்பக்கம் சிவப்பும், நீலமும் கலந்த தங்க நிறமாகவும் காட்சியளிக்கும்.கிளைவிட்டு வளரக்கூடியது.இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியது. நாள்தோறும் உண்ணுவதற்கு ஏற்றது. எந்தவித நோயாளிக்கு கெடுதல் விளைவிக்காத முதல் சத்துணவாக விளங்கக்கூடியது.இக்கீரையில் இரும்பு சத்து உள்ளது.

   இக்கீரையை உங்களுக்கு பிடித்தவாறு சமைத்து உண்ண காய்ச்சல், நடுக்கம், சன்னி, காயாரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் துவரம்பருப்பை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டு கிள்ளி போட்டு தாளித்து அவியலாக செய்து சாப்பிட சளி இருமல், கப இருமல் யாவும் நீங்கும். அத்துடன் வெங்காயமும், பெருங்காயமும் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட ஜலதோசம், சன்னி, பாதசுரம், குளிர்காய்ச்சல் ஆகியன தீரும். பித்தசுரம், வாய் ருசியற்ற போதும் பசியற்ற நிலையிலும் இக்கீரையை பழம்புளியுடன் கடைந்து சாப்பிட பகலவனை கண்ட பனி போல நீங்குமாம்.

         வாதம், வாயு, உடல் வலிகளுக்கு, சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட அவை குணமாகும்.  பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீநிச நரம்பு வலித்தல், சன்னித் தலைவலி, கண் நரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சுதாகாசன்னிக் கோளாறுகளை அரைக்கீரை உணவின் மூலம் குணமாக்கிக் கொள்ள முடியும். தவறான வழிகளில் சக்தியை இழந்தவர்களுக்கு இக்கீரை அருமருந்தாக பயன்படுகிறது. ஜீவசக்தியை பெருக்க உதவுகிறது.

  கிராமப்புறங்களில் இக்கீரையின் விதைகளை அரைத்து மாவாக்கி பயன்படுத்துவது உண்டு. நாட்ப்பட்ட பிணிகளை அரைக்கீரை போக்கக்கூடியது. இதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

     தலைமுடி நன்கு செழித்து வளரவும், சிறுவர், சிறுமிகள் சுறுசுறுப்பாக செயல்படவும் மூளையை வலிமைப்படுத்தவும், உடல் உறுதிக்கும், சிறந்த நினைவாற்றலை பெற்றுக்கொள்ளவும் வாரத்தில் இருமுறையாவது அரைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.    

இதுபோன்ற பயனுள்ள பல தகவல்களைத் தெரிந்து கொள்ள டயாவின் சித்த மருத்துவமனை யுடன் இணைந்திருங்கள். 

  

Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....