Skip to main content

63 வகை சத்துக்கள் கொண்ட அகத்திக்கீரை!!

 


                        அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.

           அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.

              நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தொடர்ந்து அகத்தி கீரையை எடுத்து வந்தால் நன்கு பால் சுரக்கும்.தலைமுடி நன்கு செழித்து வளரவும் கண் குளிர்ச்சியடையவும் பயன்படுகிறது.

                   அகத்தி பட்டை குடிநீர் பெரியம்மை நோயின் ஆரம்ப காலகட்டத்தில் பயன் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் வேர்ப்பட்டையை குறிப்புகளின்படி குடிநீர் செய்து பருகினால் உடல் எரிவு, கை எரிவு, ஆண்குறியின் உள்ளெரிவு, மேகம்,தாகம் அனைத்தும் நீங்குமாம்.

                  நாம்  உண்ணும் உணவில் வாரம் ஒருமுறை இக்கீரையை சேர்த்து சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள், வெயிலில் சுற்றி அலைபவர்கள், காபி, டீ குடித்து பித்தத்தினால் அவதிப்படுபவர்கள்  வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மற்றவர்கள் மாதம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம்.

                   இவ்வளவும் மருத்துவ குணம் கொண்ட இக்கீரையை உண்டுவந்தால் அதுவே நமக்கு தீங்கு விளைவிக்கும் உணவாக மாறிவிடும். இது பத்தியத்தை முறிக்கவல்லது. எனவே மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்திலும், பத்தியம் இருக்கும் காலத்திலும் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது

அனைத்து வகையான உடல் உபாதைகளுக்கும் தேவையான சித்த மருந்துகள் பற்றிய தகவல்கள் பெற்றிட இன்றே தொடர்பு கொள்ளுங்கள் 

டயாவின் பல்நோக்கு சித்த மருத்துவமனை 


சித்த மருத்துவர் 

Dr.I.MELWIN B.S.M.S., D.V.M.S

CONTACT : 9489832921


Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....