பொதுவாக முதுகுவலி(Back Pain) வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் அந்த முதுகுவலி(Back Pain) தொடர்ந்து நீண்ட நாட்கள் இருப்பதற்கு முழு காரணமும் நாம் மட்டுமே
அது எவ்வாறெனில்
ஒன்று : முதுகுவலி வந்துவிட்டால் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பது
இரண்டு : முதுகுவலி வந்தபின்புதான் அதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது
மூன்று : வலி வந்தவுடன் பல மாத்திரைகளை எடுத்து தற்காலிக நிவாரணம் காண்பது
இல்லையென்றால் தவறான சிகிச்சைகள் மூலம் தற்காலிகமாக வலிகளிலிருந்து தப்பித்து கொள்வது
என ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு நீண்ட காலமாக அந்த வலியை நம்முடனே வைத்துக்கொள்கிறோம்
பிறகு நாம் அதற்கு பழகிக் கொள்கிறோம்!!
இது முதுகு வலிக்கு மட்டும் பொருந்தாது உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நாம் இதே தவறுதான் செய்கிறோம்.
கடினமான உடல் உழைப்பு இருந்த காலத்தில் கூட இந்த முதுகுவலி என்ற பிரச்சனை அதிகமாக இருந்தது இல்லை.
ஆனால் இன்றைய காலத்தில் இந்த முதுகு வலி பிரச்சனை என்பது அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது!!
அதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கிறது!!
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் முதுகெலும்பு என்பது நம் உடலை தாங்கும் தூண் போன்றது!!
தூணை பழுதடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையே!!
இனியாவது சரியான பாதையை தேர்ந்தெடுத்து வலிகளில்லா வாழ்க்கை வாழுவோம்!!

Comments
Post a Comment