Skip to main content

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்


மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று 

பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்  

மூலம்(Piles) : 

மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம் 

உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது.

வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும்.

காரணிகள் : 

உடலில் ஏற்படும் அதிகளவு வெப்பமே இதற்கு பொதுவான காரணியாக பார்க்கப்படுகிறது.

நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது 

அதிகளவில் உடலுறவில் ஈடுபடுவது கூட ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது

 வீட்டு மருத்துவம்: 

பொதுவாக மூலம் வந்தவுடன் அனைவரும் நாடுவது பன்றிக்கறி. ஏனென்றால் இதற்கு குளிர்ச்சி உண்டாக்கும் தன்மை உண்டு. ஆனால் இதை எடுப்பதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அதை சரியான முறையில் வேகவைக்கவில்லையென்றால் அதிலிருக்கும் கிருமிகள் ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 

அதற்கு பதில் சித்த மருத்துவத்தில் துத்தி கீரை ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.இது உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்குவதுடன் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

இன்னும் பல சிறப்பு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள டயாவின் சித்த மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.  

சிகிச்சை :

நவீன மருத்துவத்தில் இதற்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது . ஆனால் இதில் முழுமையான தீர்வு கிடைக்கும் என்பது சந்தேகம்தான்.

சித்த மருத்துவத்தில் இதற்கு முந்தைய காலங்களை கார நூல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது நிறைய பக்கவிளைவுகளில்லாத சித்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 

இதை எடுத்துக்கொள்ளும் பொழுது வலியில்லாமல் படிப்படியாக குறைந்துவிடுகிறது.  

பௌத்திரம்(Fistula) :

பௌத்திரம் என்பது மேலே கூறியது போன்று ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைதான். ஆனால் இது ஆசனவாய் பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு சிறு பரு போன்று ஏற்படும். அது உடைந்து அதிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கும். இதை கவனிக்காமல் விட்டால் இந்த பருக்களின் எண்ணிக்கை அதிகரித்து நாளடைவில் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும். மூலத்தை விட இது சிறிது ஆபத்தான ஒன்றே.  

வீட்டு மருத்துவம்: 

குப்பைமேனி இதற்கு ஒரு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பார்க்கப்படுகிறது. குப்பைமேனியை அரைத்து சாற்றுடன் இந்த பரு வந்த இடத்தில் போட நாளடைவில் நல்ல பலன் தரும். உடல் சூட்டை தனிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

"உணவே மருந்து" என்று நம் முன்னோர்கள் கூறியது போல சிறந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு மேகம் என அழைக்கப்படும்   உடலின் வெப்பத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் இந்த இரண்டு பிரச்சனைகளும் வராமல் நம்மால் தவிர்க்க முடியும்.                 

Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....