அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம்
யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம்
அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!
அறுசுவை உணவின் நன்மைகள்
இனிப்பு
உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு
ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு
ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
காரம்
உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது.
கசப்பு:
உடம்பிலுள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியைக் கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்பு சுவை மிகுதியாய் உள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள் : கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது
உணவே மருந்தென்று நம் முன்னோர்கள் கூறியதன் அர்த்தம் இப்பொழுது புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.
இதில் குறிப்பிட்ட உணவுகளை நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இனியாவது துரித உணவுகளை தவிர்த்து, அறுசுவை உணவை உண்போம்!! ஆரோக்கியமாக வாழ்வோம்.
என்றும் அன்புடன் உங்கள் சித்த மருத்துவர் Dr.I.மெல்வின் B.S.M.S.,D.V.M.S

Comments
Post a Comment