Skip to main content

ஆர்த்தரைட்டிஸ் என்றால் என்ன?

 


இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:

  • ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.
  • ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.
  • சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.
  • கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.
  • செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.
  • மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்

நோய்க்கான காரணங்கள்:

  • மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
  • மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
  • தேய்ந்து போதல் (வயது காரணமாக).
  • படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
  • உடல் சோர்ந்து போதல்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
  • நோய்த் தொற்று – (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
  • கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல).

வாத நோய்க்கான அறிகுறிகள்:

  • மூட்டுக்களில் வலி.
  • மூட்டுக்களில் வீக்கம்.
  • மூட்டுக்களில் இறுக்கம்.
  • மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
  • லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
  • பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.
  • உடல்வலி, சோர்வு.
  • எடை குறைதல்.
  • தூக்கமின்மை.
  • தசைகளில் வலி.
  • மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).
  • மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.

டயாவின் சித்த மருத்துவமனையில் Arthritis Treatments அதாவது வாதநோய் சித்த மருத்துவ முறையில் நாங்கள் குணப்படுத்திக்கிறோம்….

இதுவரை நீங்கள் கண்டிராத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையினை நாங்கள் தருகின்றோம்.

Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட அறுசுவை உணவும் அதன் நன்மைகளும்!!

  அறுசுவை உணவு நமது தமிழர்களின் பாரம்பரியம் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு அறுசுவை உணவை கொடுத்து வரவேற்பது நமது முன்னோர்களின் பழக்கம் அதற்கு காரணம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!! அறுசுவை உணவின் நன்மைகள் இனிப்பு உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு ரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் : எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு ரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. ரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. காரம் உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டும். உணர்ச்சிகளை கூட்டவும...

மூலம் மற்றும் பௌத்திரம் எளிய வீட்டு மருத்துவம்

மனித உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் பாதையான  ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் அது மூலம் மற்றும் பௌத்திரம் எனப்படும் இந்த இரண்டு நோய்கள்தான். நம்மில் பலருக்கு தெரியாது இந்த இரண்டு நோய்களும் வேறு வேறென்று  பொதுவாக இந்த இரண்டு நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் ஒன்றுதான். ஏற்படும் இடமும் ஒன்றுதான். சித்த மருத்துவர் மெல்வின் அவர்கள் இந்த இரண்டையும் பற்றி விரிவாக நமக்கு கூறுகிறார்கள்   மூலம்(Piles) :  மூலம்(Piles) என்பது நமது ஆசனவாய் பகுதியில் நரம்புகளின் வீக்கத்தால் ஒரு புடைப்பை போன்று ஏற்படுகிறது. பொதுவாக ஒன்பது வகையான மூலம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.அவற்றில் நமக்கு தெரிந்தது உள்மூலம் மற்றும் வெளிமூலம்  உள்மூலம் என்பது ஆசனவாயின் உள்பகுதியில் ஏற்படுகிறது. இது ஒருவகையான எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் மலத்துடன் சேர்ந்து இரத்தத்தை வெளியேற்றப்படுகிறது. வெளிமூலம் என்பது ஆசனவாய்பகுதியில் சிறிது வீக்கம் ஏற்பட்டது போன்று இருக்கும். இதை கவனிக்காமல் விடும்பொழுது இந்த வீக்கம் பெரிதாகிக்கொண்டே போகும். காரணிகள் :  உடலில் ஏற்படும் அதிகளவு வெப...

கப நோய்களை விரட்டியடிக்க பயன்படும் 29 மூலிகைகள்!!

  கப நோய்களை விரட்டியடிக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்னன்னவென்று உங்களுக்கு தெரியுமா!! கூறுகிறேன் கேளுங்கள்!! துளசி தூதுவளை  கண்டங்கத்தரி  ஆடாதொடை  சிற்றரத்தை  மிளகு  அதிமதுரம் தாளிசபத்ரி  திப்பிலி  கற்பூரவள்ளி வெற்றிலை  மஞ்சள்  வெங்காயம்  நொச்சி  தும்பை  சுண்டைக்காய் குங்கிலியம்  இண்டு  இம்பூறல்  பச்சிலை  முருங்கை  முசுமுசுக்கை  சடாமாஞ்சில்  கோஷ்டம்  உத்தாமணி  கற்கடகசிங்கி வால்மிளகு  விஷ்ணுகிரந்தி                 இதுபோன்ற ஏராளமான மூலிகைகளை நமது முன்னோர்கள் சளி, இருமல், தலைவலி, சைனஸ், ஆஸ்துமா  போன்ற கபம் சார்ந்த நோய்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.                             நாம் அவற்றை பயன்படுத்த மறந்தாலும் அவற்றின் பெயர்களையாவது தெரிந்து வைத்து கொள்வோம்.அப்பொழுதுதான் வரும் தலைமுறையினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்க முடியும்....