அகத்தி இலை, பூ, பட்டை,வேர், யாவும் மருத்துவ பயனுடையவை. ஆனால் இலையை மட்டுமே அனைவரும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தர்களும், மருத்துவ வல்லுநர்களும் கூறுகின்றனர். இதன் இளம்பூவையும், மொட்டுகளையும் மற்றும் இதிலிருந்து கிடைக்கும் காய்களையும் சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். அகத்தி இலை சிறிது கைப்புசுவையுடையது. இதற்கு உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்சத்து இருப்பதால் மலசிக்கல் ஏற்படுவதை தடுக்கும். பித்தத்தால் ஏற்படும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.மருந்துகளின் வேகத்தை குறைத்து விடுவதால் மருந்துண்ணும் காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது. நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய உதவுகிறது. இதன் இலைகளை வாயிலிட்டு மெல்லும் பொழுது வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துவிடுகிறத...