களைத் தாவரமாக கருதப்படும் தர்ப்பை புல்லில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது இன்றும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . இந்த தர்ப்பை புல் குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் பழங்காலங்களில் கூரைகள் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இது லேசான துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடனும் இருப்பதால் சீனா போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் ஜெல்லி , வினிகர் , சாஸ் , தேநீர் , ஒயின் , பற்பசை போன்ற அன்றாடம் பயன்டுத்தப்படும் பொருட்களில் இதை சேர்த்து பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தர்ப்பை தாவரத்தில் சபோனின்கள் , கிளைக்கோசைடுகள் , கெளமாரின்கள் , ஃபிளேவனாய்டுகள் , மற்றும் பீனால்கள் போன்ற 72 விதமான வேதிப்பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளதாம். தாவரவியல் பெயர் : Imperata Cylindrica ஆங்கிலப் பெயர் : Blady Grass மருத்துவ குணங்கள் : நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது . புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது . ...